Enable Javscript for better performance
நிலத்தகராறில் 5 பேருக்குஅரிவாள் வெட்டு; வாகனங்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தகராறில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு; வாகனங்கள் சேதம்

    By DIN  |   Published on : 23rd April 2018 12:50 AM  |   அ+அ அ-   |    |  

    மன்னார்குடி அருகே நிலத்தகராறு தொடர்பாக சனிக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஊராட்சி முன்னாள் தலைவர் உள்பட 5 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
    திருமக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட கீழக்குறிச்சி, பிரதானசாலையைச் சேர்ந்தவர் கோ. ஜெயபால். இவருக்கும், பட்டுக்கோட்டை வட்டம், ஆவிக்கோட்டையைச் சேர்ந்த பெ. ஞானசம்பந்தத்துக்கும், நிலம் வாங்கியது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது. 
    இந்நிலையில், அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்காக, ஜெயபால் தனது ஆதரவாளர்களுடன் சென்று, டிராக்டரைக் கொண்டு உழவுப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஞானசம்பந்தம், இந்த நிலம் தொடர்பாக குத்தகை காலம் முடியவில்லை எனக் கூறி தகராறு செய்தாராம்.
    இதனால், இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் ஜெயபால் (69),புலவஞ்சியைச் சேர்ந்த ஊராட்சி முன்னாள் தலைவர் சி. கருணாநிதி(50), சி. தமிழரசன் (22), ப. சாமி (19), சோ. கௌதமன் (45) ஆகிய 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    இதில் காயமடைந்த ஜெயபால், தமிழரசன், சாமி ஆகியோர் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், கருணாநிதி, கௌதமன் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு  மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக ஐந்து பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    இந்த மோதலில், ஜெயபால் தரப்பினரது கார், டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
     இதுகுறித்து, திருமக்கோட்டை காவல் நிலையத்தில் ஜெயபால் அளித்தப் புகாரின் பேரில், ஞானசம்பந்தம், அன்புச்செழியன், தெட்சிணாமூர்த்தி, கண்மணி, சரவணன், பிரகாஷ், பிரேம்நாத் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp