Enable Javscript for better performance
மன்னார்குடி மெட்ரிக் பள்ளி வெள்ளி விழா- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ஸ்ரீ சண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி விழா (25-ஆம் ஆண்டு விழா) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார், பள்ளி நிர்வாகி எஸ். சண்முகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். கௌரவ அழைப்பாளர்களாக திருவாரூர் நேதாஜி கல்லூரி குழுமத் தலைவர் எஸ். வெங்கட்ராஜூலு பங்கேற்று, வெள்ளிவிழா மலரை வெளியிட, அதை தஞ்சை ஞானம் மேலாண்மை கல்லூரி நிர்வாகி எஸ்.பி.எஸ். அருள்தாஸ் பெற்றுக்கொண்டார். தூத்துக்குடி அரசுக் கல்லூரி  தமிழ்த் துறை தலைவர் ஜி. சந்தான மாரியம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பள்ளி முதல்வர் ஏ. அருள்ராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
    ஜேசிஐ சாசன செயலாளர் ஏ. சேதுராமன், முன்னாள் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ராதாகண்ணன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ். துரைராஜ், தொழிலதிபர் வி. ராஜகோபால், பூம்புகார் கலைக் கல்லூரி பேராசிரியர் வி. ராதா, மன்னார்குடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜெ. பிரபு, பள்ளி ஆலோசகர் இ.வி. பாண்டியன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். 
     இதில், மற்றொரு பள்ளி முதல்வர் கே. சாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.டி. ராஜசேகரன், முதுநிலை ஆசிரியர் வி. ரேகா  ஆகியோர் கலந்துகொண்டனர். 
    நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
    நிகழ்ச்சிகளை மாணவிகள் தர்ஷினி, மெர்லின், மெளனிகா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai