Enable Javscript for better performance
மருதப்பட்டினம் காமாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மருதப்பட்டினம் காமாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா

    By DIN  |   Published on : 23rd April 2018 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகேயுள்ள மருதப்பட்டினம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி, காவடி ஊர்வலம் மற்றும் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.   நிகழாண்டுக்கான திருவிழா ஏப்.15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து,  தினமும் யானை, சிம்மம், அன்னம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்பாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான காவடி வீதியுலா மற்றும் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்,  தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக திரளானப் பக்தர்கள் அலகு காவடி, வேல் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
    ஊர்வலம் கோயிலை வந்தடைந்ததும், அம்பாளுக்கு  சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர்,  மாவிளக்கு, கஞ்சி வார்த்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai