மேல்மருவத்தூருக்கு 1,300 கிலோ அரிசி அனுப்பி வைப்பு
By DIN | Published on : 23rd April 2018 12:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட ஆதிபராசக்தி மன்றம் சார்பில் 1,300 கிலோ அரிசி மேல்மருவத்தூருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் சார்பில், தமிழகம் முழுவதும் ஆன்மிகக் குழுவை அனுப்பி, பக்தர்களின் கைங்கர்யத்தை பெற்று வருவது வழக்கம். அதன்படி மேல்மருவத்தூர் ஆன்மிகக் குழுவிடம் கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி மன்றச் செயலாளர் சக்தி என். செல்வராஜ், உதவி தலைவர் சிவ. வரதராஜன், பொருளாளர் ஏ. சண்முகம், பிரசாரக்குழு நிர்வாகி எம். நடராஜன், உறுப்பினர்கள் என். கார்த்திகேயன், நளினி, மோகன் ஆகியோர் முன்னிலையில், தலா 25 கிலோ எடைகொண்ட 52 மூட்டைகள் என 1,300 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி மன்றத்தில், லெட்சுமாங்குடி, மரக்கடை, வடபாதிமங்கலம், சேகரை, கொரடாச்சேரி, பூதமங்கலம், கோரையாறு, அதங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 720-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.