Enable Javscript for better performance
லோக் அதாலத்: ரூ. 81 லட்சத்துக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் நடைபெற்ற லோக் அதாலத் நிகழ்ச்சியில், 641 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 81 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டன.
    திருவாரூரில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். கலைமதி, மகிளா நீதிபதி பக்கிரிசாமி, தலைமை நீதித்துறை நடுவர் ராஜேந்திரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் கோவிந்தராஜன், குற்றவியல் நீதித்துறை நடுவர் குமார், உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், விவாகரத்து வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள், வங்கிக்கடன் தொடர்பான வழக்குகள் என 2,880 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், நிலுவையில் இருந்த வழக்குகளில் 532 வழக்குகள், வங்கிக் கடன் தொடர்பான 109 வழக்குகள் என 641 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 81 லட்சத்துக்குத் தீர்வு காணப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai