Enable Javscript for better performance
28-இல் முதல்வர் வருகை: அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    28-இல் முதல்வர் வருகை: அதிமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

    By DIN  |   Published on : 23rd April 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூருக்கு வரும் 28-ஆம் தேதி வருகை தரும், முதல்வர் எடப்பாடி  கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
    கூத்தாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான ஆர். காமராஜ், மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் தங்க. தமிழ்க்கண்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் உதயகுமாரி, கூத்தாநல்லூர் நகரச் செயலாளர் டி.எம். பஷீர் அகம்மது உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
    அப்போது, வரும் 28-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai