Enable Javscript for better performance
அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்: அமைச்சர் ஆர். காமராஜ்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும்: அமைச்சர் ஆர். காமராஜ்

    By DIN  |   Published on : 24th April 2018 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமையும் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ்.
    திருவாரூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி பிரச்னைக்கு முழு முதல் காரணம் திமுக தலைவர் மு. கருணாநிதியே. ஆனால், மற்றவர்கள் நாடகமாடுகின்றனர் என கூறி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதிமுக ஆட்சியில் காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக, அதிமுக இணைந்து செயல்படும் என அதிமுக கட்சிப் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலுடனேயே இந்த செய்தி வந்துள்ளது என்றார் காமராஜ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai