Enable Javscript for better performance
அறிவியல் துளிர் இல்லம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகேயுள்ள எருமைப்படுகை கிராமத்தில் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மேக்நாத்சாகா துளிர் இல்லம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
    துளிர் இல்லத்தை அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் யு.எஸ். பொன்முடி தொடங்கி வைத்து, பல்வேறு எளிய முறை அறிவியல் பரிசோதனைகளை செய்து வைத்தும், மேஜிக், பாடல் பாடி, கதைகள் கூறி மேலும் அவர் பேசியது: துளிர் இல்லம் என்பது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்படும் 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களை உள்ளடக்கிய அறிவியல் செயல்பாடாகும். மாணவர்கள் மனதில் அறிவியல் ஆர்வத்தை தூண்டிவிடவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், பலவித செயல்பாடுகளை உள்ளடக்கியது.  இந்த துளிர் இல்லம் என்பது பள்ளிகளிலும் செயல்படலாம், வீட்டுப் பகுதியிலும் செயல்படலாம். ஓர் துளிர் இல்லத்தில் குறைந்தது 20 குழந்தைகள் இருக்கலாம். ஒவ்வொரு துளிர் இல்லத்திலும் ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக செயல்பட வேண்டும். மாணவர்களிடையே தலைவர், செயலர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றார் அவர். 
    நிகழ்ச்சியில், அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட  தலைவர் த. பெருமாள்ராஜ், தென்குவளவேலி ஊராட்சி ஒன்றியப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி, துளிர் இல்ல பொருப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai