Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல்: அலுவலகம் திறக்கப்படாததால் கூடுதல் பூட்டு போட்ட வேட்பாளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல்: அலுவலகம் திறக்கப்படாததால் கூடுதல் பூட்டு போட்ட வேட்பாளர்கள்

    By DIN  |   Published on : 24th April 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மகாதேவப்பட்டணத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தலையொட்டி, வேட்பு மனு பிரிசீலனை செய்யும் நாளில், கூட்டுறவு அலுவலகம் திறக்கப்படாததைக் கண்டித்து, அலுவலகக் கதவை கூடுதல் பூட்டு போட்டு வேட்பாளர்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 
    மகாதேவப்பட்டணத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலையொட்டி, வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதில் அதிமுக 11, திமுக 19, அமமுக 14 என மொத்தம் 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
    இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தின் மூன்றாம் கட்டத் தேர்தலை நிறுத்தி வைத்து, அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஏப். 20-ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, வேட்பு மனு மீதான பரிசீலனை (ஏப்.23) திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    அதன்படி, திமுக, அமமுகவைச் சேர்ந்த 33 பேர் கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர். ஆனால் அலுவலகம் திறப்படவில்லை. கூட்டுறவு வங்கிச் செயலர், அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் அலுவலகத்துக்கு வரவில்லை. இதுகுறித்து கூட்டுறவு சார் பதிவாளரிடம், வேட்பாளர்கள் செல்லிடப்பேசி மூலம் தொடர்புகொண்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை.
    மாலை வரை எதிர்பார்த்தும் அலுவலகம் திறக்கப்படாததால், அதிருப்தி அடைந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் எம்.என். பாரதிமோகன், கருணாநிதி, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் சந்திரசேகர், த. சோமசுந்தரம் ஆகியோர் கூட்டுறவு அலுவலகத்தின் முன்பக்க இரும்புக் கதவின் மேல் கூடுதலாக ஒரு பூட்டைப் போட்டு பூட்டிவிட்டுச் சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai