Enable Javscript for better performance
கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் புதிதாக 9 பேர் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் புதிதாக 9 பேர் நியமனம்

    By DIN  |   Published on : 24th April 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் புதிதாக 9 பேர் திங்கள்கிழமை பணிக்குச் சேர்ந்தனர்.
    திருவாரூர் மாவட்டத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப்  பணித் துறையில் தீயணைப்பு வீரர்கள் பணிக்கு 74 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேருக்கு கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இவர்கள் 9 பேரும்  திங்கள்கிழமை பணியில் சேர்ந்தனர். அப்போது, சர்க்கரைப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். மேலும், கேக்  வெட்டியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 
    புதிய வீரர்களை நிலைய அலுவலர் கே. ராஜேந்திரன், கோ. பன்னீர்செல்வம் மற்றும் வீரர்கள் வரவேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai