Enable Javscript for better performance
கோயிலில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே கோயில் கதவை உடைத்து, உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிச் சங்கிலி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த நான்காம் சேத்தியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலின் முன்பக்க இரும்பு வாயில் ஞாயிற்றுக்கிழமை உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த கோட்டூர் காவல் ஆய்வாளர் ஆனந்தபத்மநாபன், கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிச் சங்கிலியையும் மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. 
     இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai