Enable Javscript for better performance
செல்லிடப்பேசி செயலி மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசி செயலி மூலம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

    By DIN  |   Published on : 24th April 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செல்லிடப் பேசி செயலி மூலம் சரிபார்ப்புப் பணி  திங்கள்கிழமை அரசியல் கட்சியினர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. 
     இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, காரைக்காலில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆணையத்தால் வடிவமைக்கப்பட்ட செல்லிடப்பேசி செயலி மூலம் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆர்.கேசவன், கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பார்வைக்காக எடுக்கப்பட்டன.
    தேர்தல் துறை கண்காணிப்பாளர் புஷ்பநாதன் தலைமையிலான அலுவலர்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வரிசை எண் போன்ற விவரங்களை செல்லிடப் பேசி செயலி மூலம் ஸ்கேன் செய்தனர். இதனை அரசியல் கட்சியினருக்கு காட்டி விளக்கினர். இந்த அறிக்கை புதுச்சேரி தலைமைத் தேர்தல் அலுவலருக்கு அனுப்பிவைக்கப்படும். இவற்றை அவர் ஒருங்கிணைத்து, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைப்பார் என தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai