Enable Javscript for better performance
திருவீழிமிழலை கோயிலில் பதிகம் பாடிய மாணவர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருவீழிமிழலை, வீழிநாதசுவாமி கோயிலில், ஆனந்தம் ஆன்மிகம் அமைப்பின் குருகுல மாணவர்கள் திருஞானசம்பந்தரின் பதிகத்தைப் பாடி பாராயணம் செய்தனர்.
    சம்பந்தரும், நாவுக்கரசரும், பஞ்சக் காலத்தில் இந்த திருவீழிமிழலையில் தங்கி இறைவனிடம் பதிகம்பாடி படிக்காசு பெற்று பஞ்சம் போக்கியதாக கோயில் வரலாறு குறிப்பிடுகிறது. இத்தலத்தில் மாணவ, மாணவியர் பதிகம் பாடினர். இந்நிகழ்ச்சியில், ஆனந்தம் ஆன்மிகம் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதரன், பாலவண்ணன், திருவீழிமிழலை கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இதற்கான ஏற்பாடுகளை ஆனந்தம் ஆன்மிகம் அமைப்பின் நிறுவனர் எஸ்.வி.டி. ஜெ. கனகராஜன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai