Enable Javscript for better performance
பெண்ணைத் தாக்கிய தம்பதி உள்ளிட்ட மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் அருகே பெண் தாக்கப்பட்டது தொடர்பாக கணவன், மனைவி மற்றும் மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    வாழாச்சேரி, காலனித் தெருவைச் சேர்ந்தவர் முருகையன் (45). இவரது வீட்டின் முன்பு அதே தெருவைச் சேர்ந்த பிச்சையன் (49), அவரது  மனைவி கோமதி (38) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனராம். இதை முருகையனின் மனைவி மாரியம்மாள் (35) கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிச்சையன், கோமதி மற்றும் இவர்களது மகன் வெங்கடேசன் (18)  ஆகிய மூவரும் மாரியம்மாளை  தாக்கினராம். இதில் காயமடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுதொடர்பாக, கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து, பிச்சையன், அவரது  மனைவி கோமதி, மகன் வெங்கடேசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai