Enable Javscript for better performance
முன்விரோதத்தில் ஒருவரை உருட்டுக்கட்டையால் தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதத்தில் ஒருவரை உருட்டுக்கட்டையால் தாக்கியவர் கைது

    By DIN  |   Published on : 24th April 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஒருவரை உருட்டைக் கட்டையால் தாக்கிக் காயப்படுத்தியவர், ஞாயிற்றுக்கிழமை கைது 
    செய்யப்பட்டார்.
     ஓவர்சேரி, ஏகேஎஸ் காலனியைச் சேர்ந்தவர்கள் ராஜா (30), அருள்தாஸ் (38). இருவரது வீடும் அடுத்தடுத்து உள்ளது. இரு குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தநிலையில், சனிக்கிழமை ராஜா வீட்டில் தகராறு நடந்ததாம். இதை அருள்தாஸ் வேடிக்கை பார்த்ததால் ஆத்திரமடைந்த ராஜா, உருட்டுக் கட்டையால் தாக்கியதில், காயமடைந்த அருள்தாஸ் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து, கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai