Enable Javscript for better performance
மேலநாகையில் பாரதியாருக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மேலநாகையில் பாரதியாருக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 24th April 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாகவி பாரதியார் தலைமறைவு வாழ்க்கை நடத்திய, மன்னார்குடி அருகே உள்ள மேலநாகையில் அவருக்கு சிலையும், நினைவு மணிமண்டபமும் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    மன்னார்குடி அசோகா மெட்ரிக் பள்ளயில் வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் கவிஞர் சரசுவதி தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கு. வேதரத்தினம் மாநாட்டை தொடங்கி வைத்தார். 
    தீர்மானங்கள்: மேலவாசல் கிராமத்தில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்க, பொறியாளர்  கனகசபைப் பிள்ளைக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். ஆங்கிலேய அரசின் ராணுவப் பாதுகாப்பையும் மீறி சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியேற்றிய தேசபக்தர் ஆரியா என்கிற பாஷ்யம் பிறந்த ஊரான மன்னார்குடியை அடுத்த  சேரன்குளம் கிராமத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். 
    மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். மகாகவி பாரதியார் சுதந்திரப் போராட்டத்தின்போது, மன்னார்குடியை அடுத்த மேலநாகையில் கொடியாலம் ரெங்கசாமி ஐயங்காரின் பங்களாவில் தலைமறைவு வாழ்க்கை நடத்தியதை நினைவுகூரும் வகையில், அங்கு மணி மண்டபமும், பொது நூலகமும் அமைக்க வேண்டும். மன்னார்குடி நகரில் பாரதியாருக்கு சிலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   
    நிகழ்ச்சியில், அமைப்பின் கிளைச் செயலர் யு.எஸ். பொன்முடி வேலையறிக்கை வாசித்தார். கிளைப் பொருளாளர் எஸ். சுந்தரராஜகோபாலன் வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். 
     மாவட்டச் செயலர் இரா. தாமோதரன், பொருளாளர் ம. சண்முகம், சிறப்புத் தலைவர் சு. தியாகராஜன், மாவட்ட துணைச் செயலர் சு.அம்பிகாபதி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.
    பின்னர், அமைப்பின் புதிய தலைவராக கவிஞர் சரசுவதி தாயுமானவன், செயலராக ரா. ஏசுதாஸ், பொருளாளராக எஸ். சுந்தரராஜ கோபால், துணைத் தலைவர்களாக கே. சிவசுப்பிரமணியன், ப. மணிவண்ணன், துணைச் செயலாளர்களாக கே.வி. பாஸ்கரன், யு.எஸ். பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai