Enable Javscript for better performance
விபத்தில்லா தமிழகம் உருவாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சர் ஆர். காமராஜ்- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில்லா தமிழகம் உருவாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சர் ஆர். காமராஜ்

    By DIN  |   Published on : 24th April 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில்லா தமிழகம் உருவாக பொதுமக்கள் சாலை விதிகளை கடைப்பிடித்து பயணிக்க வேண்டும் என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். 
    திருவாரூரில் திங்கள்கிழமை, 29-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: தமிழக அரசு, சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 
    தமிழகத்தை பொருத்தவரை 2016 ஆண்டில் 17,218 பேரும், 2017-ஆம் ஆண்டில் 16,157 பேரும் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 2016 ஆண்டில் 179 பேரும், 2017 ஆண்டில் 157 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். 
    பொதுமக்கள் சாலையில் பயணம் செய்யும்போது கவனமாகவும், வாகனங்களில் செல்லும்போது சாலை விதிகளை பின்பற்றினால் விபத்துகளை குறைக்கலாம். மேலும், தலைக்கவசம் அணிந்து சென்றால் உயிரிழப்புகளை தடுக்கலாம். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது குற்றசெயல் என்பதை உணர வேண்டும். குறிப்பாக, சாலைப் பயணத்தில் செல்லிடப்பேசி  பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்பதை உணர்ந்து செயல்பட்டு விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றார் 
    காமராஜ். 
    திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, பனகல் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி. செந்தில்குமார், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai