Enable Javscript for better performance
வீழிநாதசுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாணம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோயிலில், சுவாமிக்கு திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை நடை
    பெறுகிறது.
    இக்கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப். 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு அருளியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.   
    இந்நிலையில், இன்று (24-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கப்படும் இறைவனுக்கும், அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து, வரும் 27- ஆம் தேதி திருத்தேரோட்டமும், 28-இல் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை, திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai