Enable Javscript for better performance
வெளிநாட்டில் இறந்தவர் உடலை இந்தியா கொண்டுவர கோரிக்கை: ஆட்சியரிடம் மீண்டும் மனு- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாட்டில் இறந்தவர் உடலை இந்தியா கொண்டுவர கோரிக்கை: ஆட்சியரிடம் மீண்டும் மனு

    By DIN  |   Published on : 24th April 2018 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டில் இறந்தவர் உடலை மீட்டுத் தரக்கோரி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
     திருவாரூர் அருகேயுள்ள குடவாசல், கண்டிரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வம் (32). கடந்த 4 ஆண்டுகளாக  சவுதி அரேபியாவில் பணி புரிந்து வந்த இவர், பிப்.1- ஆம் தேதி இறந்து விட்டதாக தகவல் வந்தது. பின்னர் அவரது உடல் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்படவே, இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்ச் 20-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் அவரது உறவினர்கள் மனு அளித்தனர்.  எனினும், அவரது உடல் இன்னமும் வந்து சேராததால், திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai