Enable Javscript for better performance
26-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் ஏப்.26-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து அவரவர்க்குத் தேவையான நலத்திட்ட உதவி குறித்த கோரிக்கை மனுக்கள் பெற்று, நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் ஏப்.26-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    இதில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று தங்களது கோரிக்கையை எழுத்து பூர்வமாக எழுதி மனு கொடுக்கலாம். மாற்றுத் திறனாளிகளின் மனுக்கள் மீதான கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.  கூட்டத்துக்கு வரும்போது, இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஆதார் அட்டை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினரிடமிருந்து ஏற்கெனவே பெற்றுள்ள அடையாள அட்டை மற்றும் வங்கி சேமிப்புக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இதற்கு முன்னர் விண்ணப்பித்திருந்தால் அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் இருந்தால் அதை எடுத்து வர வேண்டும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இவ்வாய்ப்பைபயன்படுத்திக்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai