Enable Javscript for better performance
காவிரி: பொதுமக்கள் உண்ணாவிரதம்: எம்எல்ஏ பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடியை அடுத்த பாளையக்கோட்டையில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
    பாளையக்கோட்டை காளியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோட்டூர் ஒன்றியச் செயலர் பரந்தாமன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் இலரா. பாரதிசெல்வன், திமுக மாவட்ட துணைச் செயலர் கலைவாணி மோகன், ஒன்றியச் செயலர் டி.எஸ்.ஆர். தேவதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai