Enable Javscript for better performance
குடும்பத் தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே குடும்பத் தகராறில் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டு காயமடைந்தார். 
    மன்னார்குடி அருகே கெழுவத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவரது மனைவி லதா. மகன் பிரவின். அதே பகுதியில் லதாவின் அக்கா கணவர் முருகையன் என்பவர் வசித்து வருகிறார். முருகேசனுக்கும் அவரது மாமியார் அடைக்கலமேரிக்கும் குடும்பத் தகராறு இருந்து வருகிறதாம். இவர்களுக்குள் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறின்போது முருகையன் வந்து தடுத்துள்ளார். 
    அப்போது, முருகேசனும், பிரவினும் சேர்ந்து உறவினர் முருகையனை அரிவாளால் வெட்டினர். இதில், காயமடைந்த முருகையன் மீட்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமணைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai