Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி

    By DIN  |   Published on : 25th April 2018 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் போக்குவரத்துத் துறை சார்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி, விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    திருவாரூர் மாவட்டத்தில் 29 ஆவது சாலைப் பாதுகாப்பு வாரம், ஏப். 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. 
     அந்த வகையில் தலைக்கவசம், சீட்பெல்ட் ஆகியவை அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே தொடங்கிய இருசக்கர வாகனப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடங்கிவைத்தார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமையில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக மருத்துவக் கல்லூரி வரை நடைபெற்றது. இந்த பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள், போலீஸார் ஆகியோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai