Enable Javscript for better performance
சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மன்னார்குடி காவல்துறை  மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில், விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
     மன்னார்குடி வட்டாரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர். தேரடியில் தொடங்கியப் பேரணி, பெரிய கடைவீதி, பந்தலடி, காந்திசாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் வழியாக வந்து பெரியார் சிலை அருகே நிறைவடைந்தது. இதனிடையே சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், ஜேசிஐ மன்னை சார்பில் விநியோகிக்கப்பட்டன.
    இந்நிகழ்ச்சியில் ஜேசிஐ மன்னை தலைவர், உடனடி முன்னாள் தலைவர், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், வேன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai