Enable Javscript for better performance
சாலையைச் சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சாலையைச் சீரமைக்கக் கோரி அனைத்துக் கட்சியினர் சாலை மறியல்

    By DIN  |   Published on : 25th April 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் அனைத்துக் கட்சி சார்பில் மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     குண்டும், குழியுமாக உள்ள மன்னார்குடி- பட்டுக்கோட்டை- மதுக்கூர் சாலையைச் சீரமைத்தல், பரவாக்கோட்டை கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளைச் செப்பனிடுதல் மற்றும் அரசு மருத்துவமனை அமைத்தல், பழுதடைந்த நிலையில் காணப்படும் வடவாற்று பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுதல், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, கண்டிதம்பேட்டை பாசன வடிகால் வாய்க்கால் மற்றும் குளங்களை தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி மன்னார்குடி- மதுக்கூர் சாலை சந்திப்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
      அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் யு. மார்க்ஸ், சமூக ஆர்வலர் யு.எஸ். பொன்முடி, சிபிஐ ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆர். திரவியம், டி.கே.பி. லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர். 
    சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள், ஒன்றியச் செயலாளர் எம். திருஞானம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி. பன்னீர்செல்வம், கே.டி. கந்தசாமி, எஸ். ராமலிங்கம், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஆர். வீரமணி, துணைச் செயலாளர் எஸ். ராகவன், விதொச செயலாளர் என். மகேந்திரன், மற்றும் எஸ். இளங்கோவன், திமுக சார்பில் மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் டி.எஸ்.டி. முத்துவேல், மாவட்டப் பிரதிநிதி எஸ்.யு. கிரி, கே. அண்ணாதுரை, கே.எஸ். பாலகுமார், சொ.வ. தங்கவேல், காங்கிரஸ் சார்பில் எஸ்.பி. செல்வேந்திரன், எஸ்.எஸ். செல்வராஜ், எஸ்.பி. ஜெகதீசன், என்.டி.  வல்லத்தரசு, மதிமுக சார்பில் என்.என்.டி. பரமசிவம், பி. ஊமைத்துரை, என்.ஆர். ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 3 மணி நேரத்துக்கு மேலாக மறியல் போராட்டம் நீடித்ததால், மன்னார்குடி- பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன், நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர் எம். ஜெயராமன்,  ஊராட்சி ஒன்றிய ஆணையர் கலியுகக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
      அப்போது, ரூ.23 கோடி மதிப்பிலான புதிய சாலை அமைக்கும் ஒப்பந்தப் பணிகள் முடிவுற ஆறு மாத காலமாகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் சாலைப் பழுதுபார்க்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் எனவும், இதர கோரிக்கைகளைப் பொறுத்து 15 தினங்களில் முன்னேற்றம் காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai