Enable Javscript for better performance
திருவாரூரில் உலக புத்தக தின விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர்  மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
    விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் பெ. செல்வராசு  தலைமை வகித்தார். நூலகர் மா. ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் பங்கேற்று, புத்தக தின விழா குறித்து விரிவாகப் பேசினார். 
     உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தொழிலதிபர் மைதீன் கோவிந்தராஜ் பங்கேற்றுப் பேசினார்.    இதில் வாசகர் வட்டத் தலைவர் குரு. சந்திரசேகரன் , துணைத் தலைவர் அ. சத்திரியன் , வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி. மகேந்திரன், மாவட்ட மைய நூலக கண்காணிப்பாளர் தையல்நாயகி ,கோமல் தமிழழகன், புலவர் எண்கண். மணி, செயற்குழு உறுப்பினர்  சாமி. தர்மலிங்கம் மற்றும் நூலகர் அன்னப்பழம் ஆகியோர் புத்தக தினம் குறித்துப் பேசினர். முன்னதாக மாவட்ட மைய நூலகர் இரா. ஆண்டாள் வரவேற்றார். நூலக உதவியாளர் சு. வடிவேலு நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai