Enable Javscript for better performance
திருவாரூருக்கு வருகை தரும் முதல்வருக்கு எதிர்ப்பு: திமுக முடிவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூருக்கு வருகை தரும் முதல்வருக்கு எதிர்ப்பு: திமுக முடிவு

    By DIN  |   Published on : 25th April 2018 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூருக்கு வருகை தரும் முதல்வருக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
    திருவாரூரில் திமுக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார்.  
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கும், அவதூறாக பேசிவரும் எச். ராஜா, எஸ்.வி. சேகர் போன்றவர்களுக்கும் கண்டனம் தெரிவிப்பது, கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாக நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், சரியாகச் செயல்படுத்தாத மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, திருவாரூருக்கு ஏப்.28-இல் வருகை தரும் தமிழக முதல்வருக்கு ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai