Enable Javscript for better performance
துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th April 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பாதுகாப்பாக பணி செய்யும் வகையில் தேவையான உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி, அண்ணா துப்புரவு பணியாளர் நலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  அண்ணா துப்புரவு பணியாளர் நலசங்கத்தின் சிறப்புத் தலைவர் கே. சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    திருவாரூர் நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியம் அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தனியார் மயத்தை தடுக்க வேண்டும். நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பாதுகாப்பாகப் பணி செய்யும் வகையில், கையுறை, காலணிகள், சோப்பு, மழைஉடை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை, ஆண்டுக்கு இருமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம்
    நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai