Enable Javscript for better performance
பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகேயுள்ள எருமைப்படுகை கிராமத்தில் உலக புத்தக தினத்தையொட்டி, பள்ளிக் குழந்தைகளுக்கான புத்தக வாசிப்புப் பயிற்சி மற்றும் குழந்தைகள் பங்கேற்ற புத்தகப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
    பேரணியில், எருமைப்படுகையைச் சேர்ந்த மேக்நாத் சாகா துளிர் இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது, புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கிராமத்தின் பொதுவான இடத்தில் பல்வேறு தலைப்பிலான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விருப்பமான புத்தகங்களை எடுத்து வாசித்தனர்.
    நிகழ்ச்சியில், மேக்நாத் சாகா துளிர் இல்லத்துக்கு ரூ. 3,500 மதிப்புள்ள புத்தகங்களை தென்குவளவேலி, பள்ளி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினருமான ராமமூர்த்தி வழங்கினார். இதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்டச் செயலர் பொன்முடி, ஆசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai