Enable Javscript for better performance
பழையனூரில் 151 பேருக்கு இலவச சமையல் உருளை இணைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், பழையனூரில் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகள் 151 பேருக்கு இலவச சமையல் உருளை இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, இண்டேன் சமையல் எரிவாயு மண்டல முதன் மை அதிகாரி  ராஜரெத்தினம் தலைமை வகித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், கூத்தாநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    நிகழ்ச்சியில், கூத்தாநல்லூர் வட்டத்துக்குள்பட்ட 151  பெண்களுக்கு இலவச சமையல் உருளை இணைப்புகள்   வழங்கப்பட்டன. இதில், முதுநிலை வருவாய் ஆய்வாளர்  காகரின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai