Enable Javscript for better performance
பிறவி மருந்தீசர் கோயிலில் வெண்ணெய்த்தாழி உத்ஸவம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி வெண்ணெய்த்தாழி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப். 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெண்ணெய்த்தாழி உத்ஸவத்தை முன்னிட்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், வெண்ணெத்தாழி அலங்காரத்தில் சந்திரசேகரர் சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோயிலின் செயல் அலுவலர் எம். முருகையன், தலைமை ஆசிரியர் திருமாறன்,  ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai