Enable Javscript for better performance
மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்து, இஸ்லாமிய தோழமைகள் அமைப்பின் சார்பில், மன்னார்குடி பெரியார் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புத் தலைவர் அப்துல் ஹலீம் தலைமை வகித்தார். இதில், லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ராஜ்குமார், பொருளாளர் செந்தில்குமார், வர்த்தகர் சங்கச் செயலாளர் ஆனந்த், ம.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி மீனாட்சிசுந்தரம், தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்தன், ம.தி.மு.க . நகரச் செயலாளர் சண்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai