ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா
By DIN | Published on : 25th April 2018 08:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திரௌபதியம்மன் கோயில் 40-ஆவது ஆண்டு தீமிதி பிரம்மோத்ஸவம் ஏப்.16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாள்தோறும் அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்று வருகிறது. இரவு சீர்காழி பம்பை தங்கமாரிமுத்து குழுவினரின் பாரத கதை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, சுவாமிக்கு கூந்தல் முடிதல் அபிஷேக ஆராதனைகள், இரவு திரௌபதியம்மன் தனியாகவும், அர்ச்சுனர், திரௌபதி, கிருஷ்ணர் ஒரு சேர வீதியுலா நடைபெற்றது. ஏப்.26-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.