Enable Javscript for better performance
27 முதல் கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    27 முதல் கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் தொடக்கம்

    By DIN  |   Published on : 25th April 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் கோடைகால கையுந்து பந்து மற்றும் சிலம்பாட்ட அடிப்படைப் பயிற்சி முகாம் ஏப்.27-ஆம் தேதி தொடங்குகிறது.
    இதுகுறித்து வடுவூர் கையுந்து பந்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
      கோடைகால கையுந்து பந்து பயிற்சி முகாம் மற்றும் சிலம்பாட்ட அடிப்படைப் பயிற்சி முகாம் ஏப்.27 முதல் மே 25 வரை வடுவூர் விளையாட்டரங்க வளாகத்தில் நடைபெறுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மாணவ, மாணவியர் சீருடை மற்றும் காலணியுடன் ஏப். 27 மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு வர வேண்டும்.
    சிலம்பம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் மட்டும் ரூ.300 பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும். சிலம்பம் தாங்களே கொண்டு வர வேண்டும். தொடர்புக்கு: 7667025533, 9787092664.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai