Enable Javscript for better performance
29-இல் எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பவுர்ணமி பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    29-இல் எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பவுர்ணமி பெருவிழா

    By DIN  |   Published on : 25th April 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் ஏப்.29-ஆம் தேதி சித்ரா பவுர்ணமி பெருவிழா நடைபெறவுள்ளது. 
    தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் எட்டுக்குடி முருகன் கோயில் பிரசித்தி பெற்றதாகும். முருகனின்அறுபடை வீடுகளான திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, திருத்தணிக்கு அடுத்தபடியாக மருதமலை ஏழாவது படை வீடாகவும், எட்டுக்குடி முருகன் எட்டாவது படைவீடாகவும் விளங்கி வருகிறது. இக்கோயில் சோழர்கால கட்டுமான முறைப்படி கட்டப்பட்டதாகும். மேலும், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.
    பொரவாச்சேரி எனும் தலத்தில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட முருகன் சிலையை வடித்த சிற்பி வேறு சிலைகளை வடித்து விடக்கூடாது என நினைத்த முத்தரசசோழன், சிற்பியின் கட்டைவிரலை வெட்டி எடுத்துவிட, அந்த சிற்பி எட்டுக்குடி தலத்தில் கட்டை விரல் இல்லாத நிலையில், ஒரே கல்லில் முருகன் சிலையுடன் மயில்காலில் தாங்கி நிற்கும் வகையில் சிறப்பாக வடி வமைத்தார். இதையறிந்த, அம்மன்னன் சிற்பி வேறு சிலையை வடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கண்பார்வையை பறித்துவிட, எண்கண் எனும் தலத்தில் கண்பார்வையில்லாத நிலையில் மீண்டும் வடிவுடைய முருகன்சிலையை வடிவமைத்தபோது சிற்பிக்கு கண்பார்வை கிடைக்கப்பெற்றது. 
    ஒரே நாளில் இம்மூன்று முருகனையும் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். எட்டுக்குடி முருகன் கோயிலில் முருகன் போர்க் கோலத்தில் உள்ளதால் அவரை சாந்தப்படுத்தும் வகையில் பாலபிஷேகம் செய்வது தனிச் சிறப்பாகும். சித்ரா பவுர்ணமி விழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழா ஏப்.20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஏப். 26-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஏப்.28-இல் ஆறுமுகவேலவர் திருத்தேரில் எழுந்தருளும் தேரோட்டமும், ஏப்.29-ஆம் தேதி சித்ரா பவுர்ணமி விழா நடைபெறவுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai