Enable Javscript for better performance
காலாவதியான பொருள்கள் பறிமுதல் செய்து அழிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் விற்பனைக்காக வைத்திருந்த காலாவதியான அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்து வியாழக்கிழமை அழிக்கப்பட்டன. 
    உணவுப் பாதுகாப்பு துறை உத்தரவின்பேரில், மன்னார்குடி நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லரை மற்றும் மொத்த வர்த்தக நிறுவனங்களில் கடந்த சில நாள்களாக ஆய்வு செய்தனர். இதில், பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட ரூ. 70,150 மதிப்புள்ள புகையிலை பொருள்கள், ரூ. 54,200 மதிப்புள்ள குளிர் பானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் மொத்தம் ரூ.1,24,350 மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மன்னார்குடி நகராட்சி குப்பை கிடங்கில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் கோ. செல்வராஜ், நகராட்சி ஆணையர் கோ. இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் அழிக்கப்பட்டன. 
    நிகழ்வின்போது, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் க. மணாழகன், எஸ். செல்வகுமார், எஸ். குருசாமி, எஸ். அன்பழகன், என். ரெங்கராஜன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் சி. வையாபுரி, க. துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai