Enable Javscript for better performance
காவிரி நடைபயணக் குழுவுக்கு திருவாரூரில் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் நடைபயணக்குழு திருவாரூருக்கு வியாழக்கிழமை வந்தது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பிரசார நடைபயணம் கல்லணையில் ஏப்.21-ஆம் தேதி தொடங்கியது. இந்த பயணம் திருவாரூர் வழியாக பூம்புகாருக்கு ஏப்.30 ஆம் தேதி சென்றடைகிறது. பின்னர், அன்று மாலையில் திருமுல்லைவாசலில் நடைபெறும் பொதுக்கூட்டத்துடன் பிரசாரப் பயணம் நிறைவடைகிறது. இந்த பிரசார பயணம், திருவாரூருக்கு வியாழக்கிழமை காலை வந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பின் பொறுப்பாளர்கள் முரளி,  சண்முகசுந்தரம் தலைமையிலான நிர்வாகிகள் இக்குழுவினருக்கு வரவேற்பு அளித்தனர். 
    நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள், வர்த்தகர் சங்கத்தினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். பின்னர் திருவாரூரில் முக்கிய வீதிகளில் பிரசாரம் மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை காலை திருவாரூரிலிருந்து புறப்படும் குழுவினர், பேரளம் மங்கநல்லூர் வழியாக மயிலாடுதுறை செல்கின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai