Enable Javscript for better performance
"குழந்தைகள், பெண்கள் தற்காப்புக்கு ஏதுவான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    "குழந்தைகள், பெண்கள் தற்காப்புக்கு ஏதுவான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்'

    By DIN  |   Published on : 27th April 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தைகள், மகளிர் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    திருவாரூர் சட்டப் பணிகள் ஆலோசனைக்குழு மற்றும் மாவட்டக் குழந்தைகள், மகளிர் மையம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி மற்றும் செயலாளர் எம். கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் எம்.ஜி. ஸ்ரீனிவாஸன் முன்னிலை வகித்தார்.  மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு வரவேற்றார்.
    தஞ்சாவூர் ஓய்வுபெற்ற சிறப்பு நிலை உளவியலாளர் எம். ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது: பெண்கள், குழந்தைகளிடம் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. இந்நிலை மாற வேண்டும். பெண்களும், குழந்தைகளும் தற்காப்புக்கு ஏதுவான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். சிறந்த புத்தகங்களே நல்ல நண்பர்களாகும். எனவே புத்தகங்களைப் படித்தும், உடற்பயிற்சி செய்தும் ஆரோக்கியமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
    நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் கனகசபேசன், துணை முதல்வர் ஹேமா ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அலுவலர் இ. சரிதா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai