Enable Javscript for better performance
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீ அனுமந்த வாகனத்தில் வீதியுலா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீ அனுமந்த வாகனத்தில் வீதியுலா

    By DIN  |   Published on : 27th April 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கையில் சித்திரை பிரமோத்ஸவத்தையொட்டி, ஸ்ரீ அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி புதன்கிழமை இரவு வீதியுலாவுக்குப் புறப்பாடாகினார்.
    108 திவ்ய தேசங்களில் 27 -ஆவது தலமாக விளங்கும் திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை காலை விஸ்வரூப திருவனந்தல், காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பக்தவத்சலப் பெருமாள் திருப்பல்லக்கில் வீதியுலா வந்து விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார். இரவு 8 மணிக்கு பக்தவத்சலப் பெருமாள் ஸ்ரீ அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவுக்குப் புறப்பாடாகினார். பின்னர், கோயிலினுள் எழுந்தருளி திருக்கண்ணாடி அறையில் ஸ்ரீ உபய நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாளுடன் சேவை சாதித்து, சாற்றுமறை தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai