Enable Javscript for better performance
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீசர் கோயில் தேரோட்டம்

    By DIN  |   Published on : 27th April 2018 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் கோயில் சித்திரை பெருந் திருவிழாவையொட்டி, தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    இக்கோயிலில் சித்திரை பெருந் திருவிழா ஏப். 12-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து,  விக்னேஸ்வரர் உத்ஸவம்,  விக்னேஸ்வரர் மூஞ்சுறு வாகனத்தில் எழுந்தருளல், சுப்பிரமணியர் உத்ஸவம், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வர் வீதியுலா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன.
    தொடர்ந்து, புஷ்ப விமானத்தில் சுவாமி வீதியுலா ஏப்.18-ஆம் தேதியும், புஷ்ப பல்லக்கு 19-ஆம் தேதியும், இந்திர விமானம் 20-ஆம் தேதியும்,  பூத வாகனத்தில் வீதியுலா 22-ஆம் தேதியும் நடைபெற்றது.
    இதேபோல், ஏப்.23-இல் யானை வாகனத்திலும் 24-இல் வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூர்த்தி வீதி உலாவும், 25-இல் கைலாச வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா வரும் காட்சியும் நடைபெற்றது.
    விழாவின் சிறப்பு நிகழ்வாக தேரோட்டம் வியாழக்கிழமை (ஏப்.26) நடைபெற்றது. அதிகாலையில் விநாயகர், முருகன்ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீர்த்தவிடங்க தியாகராஜருக்கு தீபாராதனை நடைபெற்ற பின்னர், மன்னார்குடி செங்கமலத்தாயார்அறக்கட்டளை தாளாளர் வி. திவாகரன் தலைமையில் ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் "தீர்த்தவிடங்கா' "தியாகேசா' என பக்தி கோஷமிட்டப்படி, தேர் வடம் பிடித்து இழுத்தனர்.  தேர் நான்கு வீதிகளையும் சுற்றிவந்து, நிலையை வந்தடைந்தது.
    இதில், லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் குமரசாமி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எம். முருகையன், தக்கார் மற்றும் உதவிஆணையர் த. கிருஷ்ணன், மேலாளர் சீனிவாசன், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி. ஆறுமுகம், செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai