Enable Javscript for better performance
மன்னார்குடியில் மழை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் வியாழக்கிழமை திடீரென்று மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
    கோடைக்காலம் தொடங்கியது முதல் மன்னார்குடி பகுதியில் கடும் வெயில் காரணமாக அனல் வீசிவருவதால், பொதுமக்கள் வர்த்தகர்கள் மட்டுமன்றி கால்நடைகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன் பகலில் திடீரென சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. அப்போது, சற்று குளிர்ச்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. கோடை மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வியாழக்கிழமை மதியம் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை சுமார் 30 நிமிடம் வரை பெய்தது. சாலைகளில் மழைநீர் ஓடியது. இதன் காரணமாக வெயிலின் தாக்கும் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக மாலை வரை குளிர்ந்த நிலையே காணப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai