Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெறப்பட்டன. 
    திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில், சுயத்தொழில் தொடங்குவதற்கு கடனுதவி, உதவித்தொகை,  இலவச பேருந்து பயண அட்டை, மூன்று சக்கர நாற்காலி,  மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்,  நவீன காதொலி, வேலைவாய்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகள் கோரி 126 மனுக்களை பெறப்பட்டன. 
    இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி மனுமீது உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டார். 
    கடந்த மாதம் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 550 மனுக்களில், 365 மனுக்கள் ஏற்கபட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மீதமுள்ள 185 மனுக்கள் தகுதியில்லாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் நிர்மல்ராஜ். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்கொடி, கோட்டாட்சியர்கள் இரா. முத்துமீனாட்சி (திருவாரூர்) சு. செல்வசுரபி (மன்னார்குடி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai