Enable Javscript for better performance
வேளுக்குடி மௌனானந்த சுவாமி மடத்தில் குருபூஜை- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், வேளுக்குடியில் உள்ள மௌனானந்த சுவாமி மடத்தில் குருபூஜை மற்றும் தண்டாயுதபாணி சுவாமி வீதியுலா புதன்கிழமை நடைபெற்றது.
    இந்த மடத்தில், சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மக  நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மடத்தின் பரம்பரை வாரிசுகள் டி. நடராஜன், டி. வாஞ்சிநாதன் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டின்படி குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு விபூதி, மஞ்சள் பொடி, சந்தனம், இளநீர், தயிர், பன்னீர், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களால் வேளுக்குடி சதீஸ் குருக்கள் அபிஷேகம் செய்தார். தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு,  மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தண்டாயுதபாணி சுவாமி வீதியுலாவுக்குப் புறப்பாடாகினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai