Enable Javscript for better performance
அசேசம் ஊராட்சியில் மலைபோல் குவிந்துக் கிடக்கும் குப்பை- Dinamani

சுடச்சுட

    

    அசேசம் ஊராட்சியில் மலைபோல் குவிந்துக் கிடக்கும் குப்பை

    By DIN  |   Published on : 28th April 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த அசேசம் ஊராட்சியில், நீண்ட நாள்களாக குப்பைகள் அகற்றப்படாததால், சாலையோரங்களில் அவை மலைபோல் குவிந்துக் கிடக்கின்றன.
     அசேசம் ஊராட்சியில் புதிது புதிதாக நகர்கள் உருவாகியிருப்பதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பெருகியுள்ளன. கடந்த சில நாள்களாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், குப்பை அள்ளும் வண்டி வராததால், குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட குப்பைகள், அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து, துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    இதனால், நோய்த்தொற்று ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
    எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் குவிந்துக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவேண்டும் என அசேசம் ஊராட்சி மக்கள் கோரிக்கை 
    விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai