Enable Javscript for better performance
கல்யாணசுந்தர தேவர் மறைவு: அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கல்யாணசுந்தர தேவர் மறைவு: அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி

    By DIN  |   Published on : 28th April 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மா. கல்யாணசுந்தர தேவர் ( 77) புதன்கிழமை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல்  தம்பிக்கோட்டை கீழக்காட்டில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
    அவரது உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், மத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டப் பேரவை உறுப்பினர் டி.டி.வி. தினகரன், சட்டப் பேரவை உறுப்பினர் ரெங்கசாமி, பாஜக மாநிலப் பொதுச் செலாளர் கருப்பு எ. முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் என்.ஆர். ரெங்கராஜன், ஏனாதிபாலு, கு. சீனிவாசன், மன்னை நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதுடன், கல்யாணசுந்தர தேவரின் மகன்கள் எம்.கே. சேதுராமன், எம்.கே. செந்தில் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவரது நெருங்கிய நண்பரும், ரகமத்  பெண்கள் மெட்ரிக் பள்ளித் தாளாளருமான  எம்.ஏ. முஸ்தபா பேசுகையில், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களின் அன்பைப் பெற்றவர் கல்யாணசுந்தர தேவர் என்றும், தீர்க்க முடியாத பல்வேறு பிரச்னைகளை நீதிமன்றத்துக்கே செல்லாமல், நடமாடும் நீதிமன்றமாக விளங்கி தீர்வு கண்டவர் என்றும் கூறினார்.
    தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் என். ஜீவானந்தம், பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.கே.பி. நடராஜன், மூத்த பத்திரிகையாளர் க. மாணிக்கம், ஓய்வுபெற்ற வேளாண்மை அலுவலர் கோடிலிங்கம் உள்ளிட்ட திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai