Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: வடுவூர் ஏரியில் இறங்கி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: வடுவூர் ஏரியில் இறங்கி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 28th April 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடியை அடுத்த வடுவூர் பறவைகள் சரணாலயம் ஏரியில் இறங்கி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சை மாவட்டம் கல்லணையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், அதன் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் உறுதியேற்பு ஒன்று கூடல்  நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்க, மன்னார்குடி பகுதியிலிருந்து 11 வேன்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற வேன், மன்னார்குடி தஞ்சை பிரதானச் சாலையில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் ஏரி அருகே சென்றபோது, திடீரென வேனை நிறுத்தி, கீழே இறங்கிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர், வறண்டு கிடக்கும் அந்த ஏரியில் இறங்கி, கையில் கருப்புக் கொடியை ஏந்தியபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இப்பிரச்னைக்கு தீர்வுகாணாமல் காலம் கடத்தும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
    பின்னர் வேனில் கல்லணைக்கு புறப்பட்டு சென்றனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் கலைச்செல்வம், ராஜ.ராஜசேகர், ஒன்றிய நிர்வாகிகள் பூபாலன், சதீஷ், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai