Enable Javscript for better performance
குருபரிகார கோயிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இதையொட்டி, ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேஸ்வரர் உள்ளிட்ட சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பிரதோஷநாயகர் பிராகார உலாவும் நடைபெற்றது. இதே போல், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேஸ்வரர் கோயில், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில், நரிக்குடி எமனேசுவரர்கோயில் உள்ளிட்ட கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai