Enable Javscript for better performance
கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை

    By DIN  |   Published on : 28th April 2018 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொத்தடிமை தொழிலாளர்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
    ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்த பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து மேலும் அவர் பேசியது: திருவாரூர் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்கள் சட்ட அமலாக்கத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். கொத்தடிமை தொழிலாளர்களை ஈடுபடுத்துவது என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
    அவ்வாறு எங்கேனும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அதிகபட்சமாக 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதம் ரூ. 2 ஆயிரம் வரை விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. அனைத்து நிறுவன உரிமையாளர்களும் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலிக்கு குறைவாக ஊதியம் வழங்குவது கண்டறியப்பட்டால்,  தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். 
    பயிற்சி வகுப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரோஸ்லின் ராஜன் பங்கேற்று, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் மற்றும் மனித வணிகம் குறித்து விளக்கமளித்தார். 
    இதில், துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மலர்கொடி, கோட்டாட்சியர்கள் இரா. முத்துமீனாட்சி (திருவாரூர்), சு. செல்வசுரபி (மன்னார்குடி) உள்ளிட்டோர் 
    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai