Enable Javscript for better performance
திருவாரூரில் இன்று அதிமுக பொதுக் கூட்டம்: முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் இன்று அதிமுக பொதுக் கூட்டம்: முதல்வர் பங்கேற்பு

    By DIN  |   Published on : 28th April 2018 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் சனிக்கிழமை (ஏப்.27)  அதிமுக சார்பில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறார். 
    காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூரில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.  தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகிறார். இதற்கென,  நாகை தேசிய நெடுஞ்சாலை வன்மீகபுரத்தில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.  முன்னதாக திருவாரூர் வரும் முதல்வருக்கு கொரடாச்சேரி, விளமல் ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai