Enable Javscript for better performance
திருவீழிமிழலை கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடவாசல் வட்டம், திருவீழிமிழலை வீழிநாதசுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இக்கோயிலில் இறைவன் எந்நேரமும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பது சிறப்பானதாகும்.  மகாவிஷ்ணு இங்கு சிவபெருமானை வணங்கி பலம் பெற்றதாக கோயில் வரலாறு கூறுகிறது. 
     இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து வீழிநாதசுவாமி, உத்ஸவரான மாப்பிள்ளைசுவாமி, காத்யாயினி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  தொடர்ந்து சம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 
    ஏப். 24- ஆம் தேதி மாப்பிள்ளை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கி, நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai